சோனியா, கார்கே, பிரியங்கா, இராகுல்
சோனியா, கார்கே, பிரியங்கா, இராகுல்

ஜூன் 8 அன்று காங். செயற்குழு - எதிர்க்கட்சித் தலைவர் யார்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கட்சியின் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவைத் தலைவராக இருந்துவரும் நிலையில், புதிய மக்களவைக் குழுவின் தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில், நாளைமறுநாள் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் கூட்டப்பட்டுள்ளது. அதில், மக்களவைக் குழுவின் தலைவர் யார் என்பது முடிவாகும் என்று கூறப்படுகிறது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல்காந்தியே மக்களவைக் குழுவின் தலைவராகப் பதவிக்கு வருவாரா அல்லது மணிஷ் திவாரி, சசி தரூர் அல்லது மூத்த தலைவர்கள் இந்தப் பதவிக்குக் கொண்டுவரப்படுவார்களா என்பது பற்றிய விவாதமும் எதிர்பார்ப்பும் பரபரப்பாகி உள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com