திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: மு.க.ஸ்டாலின்

திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: மு.க.ஸ்டாலின்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com