சத்தீஸ்கர்
சத்தீஸ்கர்

துப்பாக்கிச் சண்டையுடன் சத்தீஸ்கர் தேர்தல்: 71 % வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கார் மாநிலத்தில் மொத்தமுள்ள 223 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நக்சல் இயக்கத்தினரின் செல்வாக்கு உள்ள பஸ்தர் காட்டுப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களிலும் அடக்கம். எனவே, ஒரு இலட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதையும் மீறி பஸ்தாரில் சுக்மா மாவட்டத்தில் தோண்டாமர்கா பகுதியில் நக்சல்கள் வைத்து குண்டு வெடித்ததில் நக்சல் எதிர்ப்பு கோப்ரா படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

இந்த மாவட்டத்தில் மின்பா- துலெட் கிராமங்களுக்கு இடையில் உள்ள வனப்பகுதியில், சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கோப்ரா படையினர் மீது நக்சல் படையினர் சூட்டுத் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய படையினர் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.

காங்கேர் மாவட்டத்திலும் நக்சல் இயக்கத்தினருக்கும் கோப்ரா படையினருக்கும் இதேபோல துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இவ்விரண்டு மோதல்களிலும் நக்சல் இயக்கத்தவர் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நிச்சயம் காயம் அடைந்திருக்கலாம் என்றும் கோப்ரா படையினர் தெரிவித்தனர்.

நக்சல் இயக்கத்தின் ஆதிக்கமுள்ள பகுதிகளில் மாலை 3 மணிவரையிலும் மற்ற 10 தொகுதிகளில் மாலை 5 மணிவரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

logo
Andhimazhai
www.andhimazhai.com