ஐஐடி சென்னை
ஐஐடி சென்னை

தென்மாநில ஐ.ஐ.டி.களில் 26% மாணவிகள்; தேசிய அளவைவிட 6% அதிகம்!

தென் மாநிலங்களைச் சேர்ந்த நான்கு ஐஐடிகளில் மாணவிகளின் சேர்க்கை தேசிய அளவைவிடக் கூடுதலாகி உள்ளது. 

ஐதராபாத், திருப்பதி, சென்னை, பாலக்காடு ஆகிய (ஐஐடி) இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகங்களை அடக்கிய ஐதராபாத் மண்டலமே, நாடளவில் அதிக பெண் மாணவர்களைக் கொண்டு முன்னிலையில் உள்ளது. 

நாடளவில் நடப்புக் கல்வியாண்டில் ஐஐடிகளில் சேர்ந்துள்ள பெண் மாணவர்கள் 19.7 விழுக்காடாக உள்ள நிலையில், இந்த நான்கு தென்மாநில கல்விக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 26 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையில் மட்டுமில்லாமல், ஐ.ஐ.டி.களில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் 50 விழுக்காட்டைத் தாண்டிவிட்டது என்றும் தரவுகள் காட்டுகின்றன.

2023ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் பெண்களுக்கான ஒதுக்கீடு 3,411 இடங்கள் என இருந்த நிலையில், பாலினச் சமநிலையைக் கூட்டுவதற்காக மேலும் 11 இடங்கள் அதிகரிக்கப்பட்டன.   

இந்த முறை கொண்டுவரப்பட்டு ஐந்து ஆண்டுகளில் பெண்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஐஐடிகளில் 19.7 விழுக்காடு மாணவிகள் சேர்ந்துள்ளனர். 

இந்த முறை வருவதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டில் ஐஐடிகளில் சேர்ந்திருந்த பெண்களின் எண்ணிக்கை 995 மட்டுமே. கிட்டத்தட்ட மூன்று மடங்கு மாணவிகள் அதிகரித்துள்ளனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com