கேரளா
கேரளா

நடிகர் சுரேஷ்கோபி வெற்றி - கேரளத்தில் கால்பதித்த பா.ஜ.க.!

கேரள மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜ.க. வெற்றிமுகம் கண்டுள்ளது. 

திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, பிற்பகல் 3.45 மணி நிலவரப்படி 4,12, 338 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தன்னை அடுத்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில்குமாரைவிட 74,686 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் முரளீதரன் 3, 28, 124 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார். 

சுரேஷ் கோபியின் வெற்றி அறிவிக்கப்படாவிட்டாலும் அது உறுதிசெய்யப்பட்டதுதான் என்கிறது, தொகுதி நிலவரம். 

காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகள் மாறிமாறி ஆண்டுவரும் கேரளத்தில் முதல் முதலாக பா.ஜ.க. சார்பில் ஒருவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com