இந்தியா
நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
.

இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றுள்ளனர். யாக வேள்வி வளர்த்து கணபதி ஹோமத்தோடு இந்த பூஜை நடைபெற்றது. பூஜையில் செங்கோல் வைத்து பூஜிக்கப்பட்டது. பூஜை முடிந்த பிறகு 20 ஆதினங்கள் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இதையடுத்து, ஆதினங்களிடம் இருந்து செங்கோலை பெற்று கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்