சரத் பவார், தேசியவாத காங்கிரஸ்
சரத் பவார், தேசியவாத காங்கிரஸ்

நிதிஷ், சந்திரபாபுவுடன் பேசவில்லை - சரத்பவார் மறுப்பு!

மத்தியில்ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்டு பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் தலைவரும் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான சரத்பவார், முன்னாள் மத்திய கூட்டணி நட்பின் அடிப்படையில் நிதிஷ், சந்திரபாபு இருவருடனும் பேசினார் என்றும் அப்போது மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அதற்கு ஆதரவு தருமாறும் அவர் கேட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், தில்லியில் முகாமிட்டுள்ள அவரிடம் இன்று காலை செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் தான் பேசியதாக வந்த செய்தியை மறுத்தார். 

கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கூடி, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் சரத்பவார் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com