நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் (பழைய படம்)
நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் (பழைய படம்)

நீட் சர்ச்சை- மத்திய அரசின் செயலாளர் சொல்லும் விளக்கம்!

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டு பெரும் சர்ச்சையான நிலையில், மத்திய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி தில்லியில் இன்று இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

“ நாடளவில் நீட் தேர்வு நடைபெற்ற 4,750 தேர்வு மையங்களில் வெறும் ஆறு மையங்களில் மட்டுமே பிரச்னை ஏற்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. நீட் தேர்வை எழுதிய 24 லட்சம் மாணவர்களில் 1,600 பேருக்கே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் குறிப்பிட்ட தேர்வு மையங்களின் தேர்வு நேரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் காரணமாகவே குறிப்பிட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது. தேர்வு நேரம் குறைந்ததால்தான் அந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் 720க்கு 720 பெற்றுள்ளனர்.” என்று அவர் கூறினார். 

”தேர்வுக்கு முன்னர் நீட் வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படுவது தவறு. நாடளவில் நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நிகழவில்லை. தேர்வு நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாக இருந்தன. ஆனாலும், பிரச்னை குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, ஒரு வாரத்தில் அதன் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அரசுச் செயலாளர் சஞ்சய் மூர்த்தி உறுதியளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com