பன்வாரிலால்  புரோகித்
பன்வாரிலால் புரோகித்

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகல்!

தமிழக முன்னாள் ஆளுநரும் இப்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென பதவிவிலகினார். 

மாநில அரசாங்கத்துக்கும் பன்வாரிலாலுக்கும் இடையில் ஆரம்பம் முதலே மோதல் போக்கு நிலவிவந்தது. பின்னர், உச்சநீதிமன்றத்தில் வழக்குவரை விவகாரம் போனது. 

அங்கு அவரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கும் அதிருப்திக்கும் ஆளானது. 

தமிழ்நாடு, கேரள ஆளுநர்களின் மீதான அத்துமீறல் புகார் வழக்குகளோடு அவரின் மீதும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. 

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் திடீரென ஆளுநர் பதவியிலிருந்து விலகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவிவிலகுவதாக அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com