பெல்ஜியத்தில் ராகுல் காந்தி
பெல்ஜியத்தில் ராகுல் காந்தி

பாரதப் பெயர் மாற்றம் - பீதியில் உண்டான எதிர்வினை என்கிறார் ராகுல் காந்தி

பாரதம் எனப் பெயர் மாற்றும் விவகாரம் பற்றி முதல் முறையாகக் கருத்துக்கூறியுள்ள ராகுல் காந்தி, “இது இந்தியா கூட்டணியால் வந்த பீதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடன் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் ராகுல் இன்று பங்கேற்றார். அப்போது, அவரிடம் கேட்டபோது இவ்வாறு பதில் அளித்தார்.

” அரசமைப்புச் சட்டப்படி இந்தியா என்கிற பாரதம் எனக் குறிப்பிடுவதில் நான் முழுவதும் உடன்படுகிறேன். ஆனால், இந்த எதிர்வினை பீதியால் வந்திருப்பதாகவே நினைக்கிறேன். அரசாங்கத்தில் சற்று பயம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் திசைதிருப்புவதற்காகவே இப்படி செய்கிறார்கள். எங்கள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிட்டது, மிக அருமையான விசயம். நாங்கள் என்னவாக இருக்கிறோமோ அதையே இது உணர்த்துகிறது. இந்திய நாட்டின் குரலாக நாங்கள் இருப்பதாக உணர்கிறோம். ஆகவே இந்தச் சொல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பிரதமரை இது ஏதோ தொல்லைக்கு உள்ளாக்குகிறது. அதனாலேயே பெயரை மாற்ற முடிவுசெய்கிறார். எவ்வளவு நகைப்புக்கு இடமானது இது..” என்று ராகுல் காந்தி கூறினார்.

”நான் ஒவ்வொரு முறை அதானி குழுமத்தைப் பற்றி பேட்டி அளித்ததும் பிரதமர் சில புதிய திசைதிருப்பல்களுடன் வெளியே வந்துவிடுகிறார்.” என்றும் ராகுல் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com