பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மக்கள் 3ஆம் முறையாகவும் நம்பிக்கை - பிரதமர் மோடி

மக்களவைத்தேர்தலில் நாட்டு மக்கள்தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மூன்றாவது முறையாக நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தேர்தல் முடிவு குறித்து அவர்தன் சமூகஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு:

”தே.ஜ.கூட்டணி மீது மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சாதனை.

இந்தப் பாசத்துக்காக மக்களிடம் தலைவணங்குகிறேன். கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பார்வங்களை நிறைவேற்றுவதற்காகச் செய்த நல்ல வேலைகளைத் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியளிக்கிறேன்.

மேலும், கடினமாக உழைத்த அனைத்து (சங்பரிவார்) காரியகர்த்தாக்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் அளப்பரிய முயற்சிகளுக்கு என்ன சொன்னாலும் தகாது!” என்று மோடியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com