மிசோரம் ராகுல்
மிசோரம் ராகுல்

மிசோரம் தேர்தல் : 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்.!

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கானதன் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. மொத்தம் 40 தொகுதிகள் இருக்க, 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வால் கிழக்கு-1 தொகுதியில் முதலமைச்சரும் மிசோ தேசிய முன்னணியின் தலைவருமான சோரம்தங்காவை எதிர்த்து லால்சங்லூர்லா ரால்டே நிறுத்தப்பட்டுள்ளார். 

மிசோரம் மாநில காங்கிரஸ் தலைவர் லால்சவ்தா ஐஸ்வால் மேற்கு-3 தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐஸ்வால் வடக்கு-1 தொகுதியில் லால்னுன்மாவியா சௌங்கோவும், ஹேச்சக் தொகுதியில் லால்ரிண்டிகா ரால்டேவும், தம்பா தொகுதியில் லால்மிங்தங்கா சைலோவும் ஐஸ்வால் வடக்கு-2 தொகுதியில் லால்ரின்மேவியாவும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். 

காங்கிரஸ் முன்னாள்தலைவர் இராகுல் காந்தி மிசோரமுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்வாலில் ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பேரணியில் திங்களன்று பேசிய இராகுல் காந்தி, ”இஸ்ரேலில் என்ன நடக்கிறது என பிரதமர் மோடி அக்கறைப்படுகிறாரோ, அவை எல்லாம் பக்கத்து மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்டன; குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்; பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டார்கள்; ஆனால், அவற்றைவிட இஸ்ரேலைப் பற்றியே அதிகம் பேசுகிறார் பிரதமர்.” என்று கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com