இந்தியா
மோடியின் குமரி தியானம்- தேர்தல் ஆணையத்திடம் சி.பி.எம். முறையீடு!
கன்னியாகுமரியில் மோடி தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.