சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசா, மாநில அரசா என்கிற பட்டிமன்றம் இன்னும் ஓயவில்லை. அது ஒரு பக்கம் கிடக்கட்டும், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம் என மீண்டும் களம் இறங்கியிருக்கிறது, கர்நாடக அரசு.
ஆம். கடந்த 2015ஆம் ஆண்டுக்கு அடுத்து அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி நிலைமை பற்றி சர்வே தொடங்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த சர்வே பணி, அடுத்த மாதம் 7ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் 60 கேள்விகள் அடங்கிய பட்டியலை வைத்துக்கொண்டு மக்களிடம் விவரங்களைக் கேட்டுப் பதிவுசெய்வார்கள். இந்தப் பணிக்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.