யோகா செய்யும் ஸ்ரீ சுவாமி சிவானந்தா
யோகா செய்யும் ஸ்ரீ சுவாமி சிவானந்தா

மூத்த வயது தாத்தா செய்த பலே செயல்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 127 வயதான ஸ்ரீ சுவாமி சிவானந்தா தாத்தா யோகா செய்து அசத்திய சம்பவம் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

வரும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியாவில் ஜூன் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 127 வயதான யோகா குரு பத்ம ஸ்ரீ சுவாமி சிவானந்தா என்பவர் தள்ளாத வயதிலும் யோகா செய்து அசத்தியுள்ளார்.

அவர் கழுத்தை வலப்பக்கமும் இடப்பக்கமும். கைகளை மேலும் கீழும் சுற்றி யோகா செய்யும் வீடியோவானது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமி சிவானந்தா வாரணாசியைச் சேர்ந்தவர். அவர், தினந்தோறும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் தனக்கான வேலைகளைத் தாமே செய்து கொள்கிறார். எண்ணெய் தவிர்த்த உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். இது போன்று கட்டுக்கோப்புடன் வாழ்வதே அவரின் ஆயுள் நீட்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com