17 பேர் பலி... அடுத்தடுத்து தீ விபத்துகள்... மேற்குவங்கத் துயரம்!

Buliding collapsed in fire accident
தீ விபத்து ஏற்பட்ட கட்டடம்
Published on: 

மேற்கு வங்க மாநிலத்தில் 2 நாள்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐந்து மாடிக் கட்டட உணவக விடுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்திலிருந்து கொல்கத்தா வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

விபத்து குறித்த தகவல் வந்ததும், விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் உணவக விடுதியில் சிக்கியிருந்த 80 பேரை காப்பாற்றினர்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் அடர்ந்த புகைமூட்டமாக இருந்ததால், தீ விபத்தைக் கட்டுப்படுத்த கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

இதுகுறித்த முதற்கட்ட விசாரனையில், மின்சாரக் கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்றும் இருப்பினும், தடவியல் வல்லுநர்களின் ஆய்வுக்குப் பிறகே விபத்திற்கான உண்மைக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தின் தாராபித்தில் நேற்று அதிகாலையில் நான்குமாடி தனியார் உணவக விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com