'விக்ரம்-1' ... இந்தியாவில் தனியார் நிறுவனம் தயாரிக்கும் முதல் ஆர்பிட்டல் ராக்கெட்!

orbital rocket
தனியார் நிறுவனம் தயாரிக்கும் முதல் ஆர்பிட்டல் ராக்கெட்
Published on

இந்தியாவின் விண்வெளித் துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஒரு புதிய சாதனையைப் படைக்கவுள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கிய 'விக்ரம்-1' ராக்கெட்டின் முதல் ஆர்பிட்டல் சோதனை ஏவுதலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

'மிஷன் ஆகமன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணம் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஏராளமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டப் பின்னர் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்தியாவில் தனியார் நிறுவனம் உருவாக்கிய முதல் ஆர்பிட்டல் ராக்கெட் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள் கருவிகளையும் இந்த ராக்கெட் சுமந்து செல்லும்.

இந்த ஏவுதல் வெற்றிகரமாக அமைந்தால், உலகளாவிய வர்த்தக விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும், விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறனை உலக அரங்கில் மேலும் வலுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com