காஷ்மீரில் பேருந்து விபத்து- 21 பேர் பலி!

காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பேருந்து விபத்து; 21 பேர் பலி.
காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பேருந்து விபத்து; 21 பேர் பலி.
Published on

காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில்  இன்று காலையில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 

29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இராம்நகரிலிருந்து உதம்பூருக்கு அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் பயணம்செய்த தனியார் பேருந்து மலை உச்சி கிராமமான காகோர்ட் அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சரிவில் விழுந்தது. இன்னொரு சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது அது செங்குத்தாக போய் விழுந்தது. 

தற்செயலாக விபத்து நிகழ்ந்த காலை 10 மணிக்கு அந்த வழியாகச் சென்ற இராணுவ வாகனத்தில் இருந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இறந்தவர்கள், காயம்பட்டவர்களை மீட்கமுடியாத அளவுக்கு பேருந்தே முழுக்க உருக்குலைந்த இரும்புக் கூடாரம் போல ஆகியிருந்தது என இராணுவத்தினர் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திலேயே 15 பேர் இறந்துவிட்டனர். நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று உதம்பூர் ரியாசி சரக காவல்துறை டிஐஜி சிவ்குமார் சர்மா தெரிவித்தார். 

பின்னர், பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com