மாநகராட்சி அலட்சியம்... 3 மாணவர்கள் பலி!

மாநகராட்சி அலட்சியம்... 3 மாணவர்கள் பலி!
Published on: 

டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வெள்ள நீர் புகுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டித்து சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

கீழ்தளத்தில் உள்ள நூலகத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் தரைதளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் மாணவர்கள் ஒன்றுகூடி டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை சரிசெய்யாததன் காரணமாகவே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக மாணவர்களும் அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com