கோவேக்சின் தடுப்பூசி
கோவேக்சின் தடுப்பூசி

கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவு! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிஷீல்டும், கோவேக்சினும் பயன்படுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ‘ஸ்பிரிங்கா் நேச்சா்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னா் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ஆம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 போ், 18 வயதுக்கு மேற்பட்ட 291 போ் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமாா் 50 சதவீதம் போ் கோவேக்சின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்சின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7 சதவீதம் பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்சின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்சின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சா்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com