வாக்காளர்கள்
வாக்காளர்கள்

3ஆம் கட்டத் தேர்தல்: 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நிலவரம் என்ன?

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலையொட்டி குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளன. இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் 25, கர்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 14.60 சதவீதமும் குறைந்தபட்சமாக குஜராத்தில் 9.87 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com