5 மாநில தேர்தல் தேதிகள் விவரம் - டிச.3இல் முடிவுகள்!

5 மாநில தேர்தல் தேதிகள் விவரம் - டிச.3இல் முடிவுகள்!

தெலங்கானா முதலிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் நவம்பர் 7ஆம் தேதி மிசோரம் மாநிலத்திலும், 7, 17 என இரண்டு கட்டங்களாக சத்தீஸ்கரிலும் 17ஆம் தேதி மத்தியபிரதேசத்திலும் 23ஆம் தேதி ராஜஸ்தானிலும் 30ஆம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com