லாரி மீது பேருந்து மோதியது... ராஜஸ்தானில் உடல்கருகி 5 பேர் உயிரிழப்பு!

bus accident
விபத்தில் தீப்பிடித்த பேருந்து
Published on

ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானதுடன், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் தெளசா மாவட்டத்தில் உள்ள தில்லி – மும்பை நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூருக்கு ஒரு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது ராஜஸ்தானின் தெளசாவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி தீப்பிடித்தது.

உடனடியாக பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியது. அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் பயணிகள் இருந்ததால், அவர்களால் வெளியேற முடியவில்லை.

இந்த பயங்கர விபத்தில், 5 பேர் உடல் கருகி பேருந்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவர், வழியிலேயே உயிரிழந்தனர்.

மேலும், 15-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com