மீண்டும் மோடி பிரதமராக 52% ஆதரவு - இந்தியா டுடே கருத்துக்கேட்பு முடிவு

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

மூன்றாவது முறையாகவும் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியே வருவதற்கு 52 சதவீதம் பேர் விரும்புவதாக இந்தியா டுடே கருத்துக்கேட்பு முடிவு தெரிவிக்கிறது.

மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு ஓராண்டு இருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகள், கருத்துக்கேட்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், இந்தியா டுடே ஊடகமும் சி வோட்டர் அமைப்பும் இணைந்து நடத்திய ஆகஸ்ட் மாதக் கருத்துக்கேட்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வரவேண்டும் என 52 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பதினாறு சதவீதம் பேரே காங்கிரஸ் எம்.பி. இராகுல் காந்தியை பிரதமராக ஏற்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

இதேசமயம், நடப்பு மைய அரசின் ஆட்சியின் மீது 63 சதவீதம் பேர் திருப்தி அடைவதாகக் கூறியுள்ளனர். இது, சில மாதங்களுக்கு முன்னைய நிலையைவிடக் குறைவு. சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து 72 சதவீதம் பேர் திருப்தி என கருத்து தெரிவித்திருந்தனர்.

பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புவோரில் 44 சதவீதம் பேர், மோடிக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். வளர்ச்சி, இந்துத்துவா கொள்கை போன்றவை அடுத்தடுத்த காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com