புதுதில்லியை வறுத்த வெயிலில் தூறல் மழை
புதுதில்லியை வறுத்த வெயிலில் தூறல் மழை

அம்மாடி... 52.3 டிகிரி செல்சியஸ் - காய்ந்து கருவாடு ஆன தலைநகர் தில்லி- !

தலைநகர் புதுதில்லியில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, இன்று 52.3 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.

தில்லி புறநகர்ப் பகுதியான முங்கேஸ்பூரில் இன்று பிற்பகலில் 50 டிகிரிக்கும் மேல் வெப்பம் கடுமையாகத் தாக்கியது. 

முன்னதாக, நாட்டின் வடமேற்குப் பகுதியில் வழக்கத்தைவிட 4.5 டிகிரியிலிருந்து 6.4 டிகிரிவரை கூடுதலாக இருக்கும் என்றும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் வெப்பத்தாக்கு, உடல்நலிவாக உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது. 

வானிலை மையத்தின் கணிப்பைவிடக் கூடுதலாக, 6.5 டிகிரிவரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது.

இதேசமயம், மாலை 4 மணிக்கு மேல் நகரின் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே பெய்த தூறல் மழை மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com