தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

6-ம் கட்டத் தேர்தல்: மொத்தம் 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!

நாடாளுமன்ற மக்களவைக்கான ஆறாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்துள்ளது. 

இன்று ஆறு மாநிலங்களுக்கும் இரண்டு ஒன்றியப் பகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணிவரை 59.05 சதவீத வாக்குகள் பதிவாகின. 

அதிகபட்சமாக, மேற்குவங்கத்தில் 78.19 சதவீத வாக்குகளும், தில்லியில் குறைந்த அளவாக 54.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

குடியரசுத்தலைவர் முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் தில்லியில் இன்று வாக்களித்தனர்.  

மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்டமாக வரும் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 

logo
Andhimazhai
www.andhimazhai.com