இந்தியா

பா.ஜ.க.வில் சேர்ந்த ஏழு ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஹர்பஜன் சிங்கின் வீட்டின் முன்பாக இன்று ஆ.ஆ.கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜலந்தரில் உள்ள சிங்கின் வீட்டுச் சுவரில் அவரைத் துரோகி எனக் குறிப்பிட்டு, கருப்பு மையில் எழுதியுள்ளனர்.
முன்னதாக, இராகவ் சத்தா தலைமையில் நேற்று மூன்று ஆம் ஆத்மி எம்.பி.கள் பா.ஜ.க. தலைவர் நிதின் முன்பாக அக்கட்சியில் சேர்ந்தனர். ஹர்பஜன் உட்பட நால்வர் விரைவில் அக்கட்சியில் இணைவார்கள்.
இந்த நிலையில், கட்சி தாவிய ஏழு பேரும் துரோகிகள் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் சாடியுள்ளார்.