அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் –கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டருடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் செல்ல தொடங்கினர்.

சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பா.ஜ.க. அலுவலகம் உள்ள பகுதியில் டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com