அண்மையில் பா.ஜ.க.விலிருந்து விலகிய பிரபல மலையாள நடிகர் தேவன், விஜய்யுடன் கைகோத்து கேரளத்தில் த.வெ.க.வை வழிநடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, த.வெ.க. பிரதிநிதிகள் சிலர் தேவனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவரே தெரிவித்துள்ளார்.
அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரினால்தான் விஜய்யுடனான சந்திப்பு தாமதமாவதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையாளத்தில் ஏராளமான வில்லன் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகர் தேவன், விஜய்யுடனும் சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அவருடைய ரசிகர்கள் கேரளத்தில் கட்சியைத் தொடங்க முயன்றுவருகின்றனர். ஆனால், அங்கு கட்சியை வழிநடத்த சரியான நபர் இல்லாததால், விஜய் தொண்டர்களின் முயற்சி சாத்தியமாகவில்லை.
எனவே, மலையாள நடிகர் தேவன் த.வெ.க.விற்குள் நுழைவதால், கேரளத்தில் த.வெ.க. கட்சி வலுப்பெற தூண்டுதலாகக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, பா.ஜ.க.விலிருந்து தேவன் வெளியேறினார். அவரின் முடிவை மாற்ற பா.ஜ.க. முயன்றபோதும், சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் மதச்சார்பற்ற சித்தாந்தங்களை பா.ஜ.க. பின்பற்றாததால், அதிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டார்.
கேரளத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ், விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால், அம்மாநிலத்தில் த.வெ.க. எளிதாக தனது செயல்களை விரிவடையச் செய்யும் வாய்ப்புள்ளது.
தமியகத்தில் விஜய் வெற்றி பெற்ற பின்னர், கேரளத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் வயநாடு, பாலக்காட்டில் பேரணி நடத்தினர்.
மேலும், கூட்டங்களில், ஏராளமான பெண்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.