வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்... நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோ!

Actor Prakash raj
நடிகர் பிரகாஷ் ராஜ்
Published on: 

வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

“எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு பெங்களூரு தொகுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். இது நல்ல நகைச்சுவை இல்லையா?

நான் இந்தத் தொகுதியிலே பிறந்து, பள்ளி-கல்லூரிக் படிப்பை இங்கேயே முடித்ததுடன், இதே பகுதியில் நாடகத் துறையில் பணியாற்றியுள்ளேன்.

மேலும், இந்தத் தொகுதியின் எம்.பி. வேட்பாளராகவும் இருந்துள்ளேன். இந்த வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட எனது பெயரை, சேர்ப்பதற்கான வழிமுறைகளை நான் தெரிந்துகொள்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்காத காரணத்தால், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலரின் வாக்களிக்கும் உரிமையை மறுக்க முடியுமா?

உங்களைத் தேர்ந்தெடுக்காத சில குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை நீங்கள் மறுக்கலாம். ஆனால், உங்களை வீழ்த்துவதற்கான எங்களுடைய அதிகாரத்திலிருந்து எங்களைத் தடுக்க முடியுமா? ” என்று பிரகாஷ்ராஜ் அந்தக் காணொலியில் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com