ஆதித்யா எல்-1 முதல் புவி வட்டப்பாதை மாற்றம்
ஆதித்யா எல்-1 முதல் புவி வட்டப்பாதை மாற்றம்இஸ்ரோ

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி வட்டப் பாதை முதல் மாற்றம்!

சூரியப் புலத்தை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை, முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.40 மணிக்கு இது நிகழ்ந்ததாக இந்திய விண்வெளிஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம், ஆதித்யா விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆதித்யா விண்கலமானது 245 கி.மீ. x 22459 கி.மீ எனும் பாதையில் சுற்றிவருகிறது.

அடுத்தகட்டமாக, வரும் 5ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆதித்யாவின் சுற்றுப்பாதையை மாற்றியமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, ஆதித்யா விண்கலமானது திட்டமிட்டபடி நேற்று முற்பகல் 11.50 மணிக்கு சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஏவி 63ஆவது நிமிடத்தில் விண்கலமானது தனியாகப் பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் பயணத்தைத் தொடங்கியது.

logo
Andhimazhai
www.andhimazhai.com