ஆதித்யா எல்-1
ஆதித்யா எல்-1இஸ்ரோ

சீறிப் பாய்ந்தது ‘ஆதித்யா எல்1’ : நிலவை அடுத்து சூரியனை நோக்கி..!

சூரிய ஆய்வுக்காக இந்தியாவின் ‘ஆதித்யா எல் 1’ விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்திலிருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா – எல்1எனும் இந்த அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

மொத்தம் 1475 கி.கி. எடை கொண்ட இந்த விண்கலத்தில், ஏழு வகையான ஆய்வுக் கருவிகள் உள்ளன.

இன்று பூமியிலிருந்து புறப்பட்டுள்ள ஆதித்யா விண்கலமானது, 125 நாள்களுக்குப் பிறகு, சூரியனின் ஈர்ப்பு விசையும் பூமியின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும் புள்ளியான லாக்ராஞ்சியன் 1 புள்ளிக்குச் செல்லவேண்டும் என்பது இலக்கு.

பூமியிலிருந்து 15 இலட்சம் கி.மீ. தொலைவில் உள்ள அந்தப் புள்ளியில் ஆதித்யா விண்கலமானது நிலைநிறுத்தப்பட்டபின், விண்கலமானது திட்டமிட்டபடி சூரியப் புலத்தை ஆய்வுசெய்யத் தொடங்கும்.

ஏற்கெனவே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா ஆகியவற்றின் சார்பில், சூரியனை ஆய்வுசெய்வதற்கு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஐந்தாவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com