குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 241 பேரைப் பலிகொண்ட கொடூர விமான விபத்து பற்றிய அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விமான விபத்து புலனாய்வு அமைப்பு இந்த விபத்தைப் பற்றி துறைரீதியான ஆய்வில் ஈடுபட்டு அதன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரங்களுக்கான எரிபொருள் தடைபட்டதுதான் விபத்துக்கான முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
எரிபொருளுக்கான பாதையை அடைத்தாயா என தலைமை விமானி துணை விமானியிடம் கேட்டதும், அதற்கு அவர், நான் அடைக்கவில்லை என்று பதிலளிப்பதும் விமானிகள் அறையில் ஒலிப்பதிவு ஆகியுள்ளது.
இது விமானம் புறப்பட்ட 32ஆவது வினாடியிலேயே பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது.
இயந்திரத்துக்கான எரிபொருள் செல்லாததன் காரணமாக, மேற்கொண்டு அது இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
ஆர்ஏடி முறையில் இயக்க முயல்வதற்குள் கண்மூடித் திறக்கும் நேரத்தில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற 241 பயணிகளும் ஊழியர்களும் பலியான கொடூர விபத்து நடந்தேமுடிந்துவிட்டது.