ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்

விமான ஊழியர்கள் வேலை நிறுத்தும்… 30 பேர் திடீர் பணி நீக்கம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 30 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2022ஆம் ஆண்டு வாங்கியது.

சமீபத்தில் பணி தொடர்பாக டாடா குழுமம் வெளியிட்ட அறிவிப்புக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊதியம், போனசில் பாகுபாடு காட்டுவதாகவும், நிர்வாகம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் திடீரென்று உடல் நலக்குறைவு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஊழியர்கள் 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் கூறி விடுமுறை எடுத்துள்ள மீதமுள்ள ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்குள் பணியில் சேர வேண்டும். இல்லையென்றால் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே கேபின் குழு உறுப்பினர்களுடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com