கைகோர்த்தார் அகிலேஷ்... ராகுல் யாத்திரையில் உற்சாகம்!

ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ்
ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ்
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று கலந்துகொண்டார்.

அண்மையில் காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு உறுதியான நிலையில், ஆக்ராவில் இன்று நடைபெற்ற பயணத்தில் அகிலேஷ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், “வரும் நாள்களில் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதே நம் முன்னா இருக்கப்போகும் மிகப் பெரிய சவால். அம்பேத்கரின் கனவை நினைவாக்க நாம் இதனைச் செய்ய வேண்டும். பாஜகவை ஒழிப்போம். தேசத்தைப் பாதுகாப்போம்.” என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com