அமித்ஷா
அமித்ஷா

சிஏஏ - தமிழ்நாட்டு அரசு தடுத்துவிட முடியாது என்கிறார் அமித்ஷா!

குடியுரிமைத்திருத்தச் சட்டம் -சிஏஏவை தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் போன்ற மாநில அரசுகள் தடுக்கமுடியாது என மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த சிறப்புப் பேட்டியிலேயே அவர் இதைக் கூறியுள்ளார். 

சில மாநிலங்களில் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளார்களே எனக் கேட்டதற்கு, “ அரசமைப்புச்சட்டம் பிரிவு 11இன்படி மைய அரசு நாடாளுமன்றத்தின் மூலம் குடியுரிமை தொடர்பாக விதிகளை உருவாக்குவதற்கு அதிகாரம் படைத்ததாகும்.” என்ற அவர், “ இது முற்றிலுமாக மைய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட விசயமேதவிர, மாநிலங்களுக்கானது அல்ல.தேர்தலுக்குப் பிறகு எல்லா மாநிலங்களுமே இதற்கு ஒத்துழைக்கும் என நினைக்கிறேன். சும்மா சம்பந்தப்பட்டவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக அவர்கள் இப்படி தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.” என்றும் கூறியுள்ளார்.  

பழங்குடி மக்களின் பகுதிகளில் புதிய சட்டம் குழப்படியை உண்டுபண்ணாதா என்ற கேள்விக்கு, இம்மியளவும் இல்லை என அமித்ஷா பதில் கூறினார்.

சிஏஏ பழங்குடியினர் பகுதிகளில் மக்களிடையே விகிதாச்சாரத்தையோ உரிமைகளையோ மாற்றிவிடாது என்றும் இன்னர் லைன் பெர்மிட் எனப்படும் உள்ளக அனுமதி நடைமுறையில் இருக்கும் பகுதிகளுக்கும் அரசமைப்புச் சட்ட ஆறாவது பிரிவின்படி சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தாதபடி ஏற்பாடு செய்திருக்கிறோம்; விண்ணப்பத்துக்கான செயலியில் அந்தப் பகுதிகளையே காட்டாதபடி செய்யப்பட்டுள்ளது என்றும் அமித்ஷா கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com