ஆனி ராஜா
ஆனி ராஜா

ராகுல் தொகுதியில் போட்டியிடும் டி.ராஜா மனைவி ஆனி ராஜா!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவியும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஆனி ராஜா, கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியின் எம்.பி.யாக ராகுல்காந்தி இருந்துவரும் நிலையில், மீண்டும் அவரே போட்டியிட வாய்ப்பு உண்டு எனக் கூறப்படுகிறது.

இந்திய கம்யூ. கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி, முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறார்.

திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் எம்.பி. பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் தற்போதைய எம்.பி.யான சசிதரூர் மீண்டும் போட்டியிட்டால், இரு தரப்புக்கும் கடும் போட்டியாக இருக்கும். 2005ஆம் ஆண்டில் ரவீந்திரன் இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்தார்.

முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் திருச்சூர் தொகுதியிலும், சி.ஏ.அருண்குமார் மாவேலிக்கரை தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்றும் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம் இன்று திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com