கூடுதலாக 10,023 மருத்துவ இடங்கள்...ஜே.பி. நட்டா தகவல்!

கூடுதலாக 10,023 மருத்துவ இடங்கள்...ஜே.பி. நட்டா தகவல்!
Published on

அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் கூடு​தலாக 10,023 இடங்​களை அதிகரிக்க மத்​திய அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்​கு, மத்திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் மருத்​து​வர்​களின் பற்​றாக்​குறையை சமாளிக்க, அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் கூடு​தலாக 10,023 இடங்​களுக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. எம்​பிபிஎஸ் படிப்​புக்கு 5,023 இடங்​கள் மற்​றும் முது​நிலை மருத்​து​வப் படிப்​புக்கு 5,000 இடங்​கள் ஒதுக்​கப்​படும். இதன் மூலம் இந்​தி​யா​வில் மருத்​து​வக் கட்​டமைப்பு அதி​கரிக்​கும்.

மத்​திய அரசின் 3ஆம் கட்ட திட்​டத்​தின் கீழ் கூடு​தல் மருத்​துவ இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் மாநில அரசுகள் மற்றும் மத்​திய அரசின் மருத்​துவக் கல்​லூரி​களில் இளநிலை மற்றும் முது​நிலை மருத்​து​வப் படிப்​பு​கள் அதி​கரிக்​கும். இந்த கூடுதல் இடங்​கள் 2025 - 2026ஆம் ஆண்டு முதல் 2028 - 2029ஆம் ஆண்​டுக்​குள் அமல்​படுத்​தப்​படும். இந்​தக் கூடு​தல் இடங்​களை உரு​வாக்க ஒவ்​வொரு இடத்​துக்​கும் ரூ.1.50 கோடி செல​விடப்​படும். அந்​தத் தொகை​யில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​களின் உள்கட்டமைப்பு வசதி​கள், ஆய்​வகங்​கள், கருவி​கள் போன்ற மேம்பாட்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

அதன்​படி, திட்ட அறிக்​கையை சமர்ப்​பிக்​கும்​படி மாநில அரசுகள் மற்​றும் யூனியன் பிரதேச அரசுகளைக் கேட்​டுக் கொண்டுள்ளோம். இந்​தப் புதிய திட்​டத்​தில் கிராமப்​புறங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான இடங்​களை அதி​கரிக்​கும் அதேவேளை​யில், விதி​முறை​கள், சீர்​திருத்​தங்​களை தேசிய மருத்​துவ ஆணை​யம் அறி​முகப்​படுத்தி உள்​ளது. அதில் மேம்​பட்ட மருத்​து​வக் கல்​வி, ஆசிரியர்​கள் நியமனம், அவர்​களுக்​கான தகுதி வரையறை போன்​றவை குறித்து விரி​வான வழி​முறை​கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆண்​டு​தோறும் மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​களுக்கு அதிக எண்​ணிக்​கை​யில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்​கின்​றனர். தற்​போது கூடு​தலாக 10,023 இடங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ள​தால், மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யின் போது கணிச​மான இடங்​கள் கிடைக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

logo
Andhimazhai
www.andhimazhai.com