வாக்காளர் ’படிவம்-6’ திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை!

Chief election commissioner Gyanesh kumar
தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார்
Published on: 

தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரைக் கைது செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

"புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6-ஐத் திருத்தியுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவெ பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ்குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார். பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இக்குற்றத்திற்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்." என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com