டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது! அமலாக்கத்துறை நடவடிக்கை!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு வியாழனன்று மாலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு அவரை இரண்டு மணிநேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளது.

2021 இல் பதிவு செய்யப்பட்ட டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை அவரைக் கைது செய்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மியை சேர்ந்த மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் உள்ளனர். கடந்தவாரம் பிஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான  கவிதாவும் கைது செய்யப்பட்டது இந்த வழக்கில் தான்.

 இந்த கொள்கை வகுப்பதில் ஆம் ஆத்மி தலைவர்கள் சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து இதுவரை அமலாக்கத்துறை அனுப்பிய எட்டு அழைப்பாணைகளுக்கு ஆஜர் ஆகாமல் இருந்தார் கெஜ்ரிவால்.

இது தொடர்பான கெஜ்ரிவாலின் மனுவின் மீது டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறை நடவடிக்கைகளில் இருந்து எந்த விலக்கும் பாதுகாப்பும் வழங்காத நிலையில் இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உச்சநீதிமன்றத்தை இது தொடர்பாக ஆம் ஆத்மி சார்பாக அவசரமாக அணுகப்பட்டுள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்வார் என்றும் அக்கட்சியினர் கூறி உள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com