அரவிந்த் சிங் லவ்லி
அரவிந்த் சிங் லவ்லி

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் விலகல்!

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு அதில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. நடைபெற்றுவருகிற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு அதன்மூலம் தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துவரும் அரவிந்தர் சிங் லவ்லி அப்பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

தனது விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.

” காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த உண்மையை வடகிழக்கு டெல்லி வேட்பாளர் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை.” என அரவிந்த் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com