மக்களவைத் தேர்தல்: போட்டியிலிருந்து விலகிய பிரபல பா.ஜ.க. வேட்பாளர்!

பவன் சிங்
பவன் சிங்
Published on

பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல போஜ்பூரி பாடகரும் நடிகருமான பவன் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்புகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், பா.ஜ.க. சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 195 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.

இந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகி ஒருநாள்கூட ஆகாத நிலையில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல போஜ்பூரி நடிகரான பவன் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் தன்னால் போட்டியிட முடியவில்லை எனவும், இது தொடர்பாக ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தனது எக்ஸ்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பவன் சிங்கின் இந்த அறிவிப்பு பா.ஜ.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com