அயோத்தி: குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது!

குழந்தை ராமர் சிலை
குழந்தை ராமர் சிலை
Published on

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் எட்டாயிரம் ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் மந்திரங்களை ஓதினார்கள்.

ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது கோயிலில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com