
கர்நாடகத்தில் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
மேலும், பெங்களூருக்குச் செல்லும் தமிழக அரசு, தனியார் பேருந்துகள் ஒசூருடன் நிறுத்திவைக்கப்பட்டன.
சென்னை – பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளியில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் திரும்பப் பெறவேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டியளித்தைத் தொடர்ந்து, கன்னட அமைப்புகள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தன.
அதைத் தொடர்ந்து, ஒசூர் – பெங்களூர் இடையே வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னட சாளுவாலி கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜை பெங்களூர் போலீசார் கைதுசெய்தனர்.