(வலமிருந்து இடம்) சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன்
(வலமிருந்து இடம்) சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன், சரண்சிங், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் குடிமக்களுக்கான மிக உயரிய ‘பாரத ரத்னா’ கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை முதலிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில், கடந்த மாதம் பீகார் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கர்ப்பூரி தாக்குருக்கும், பிப்ரவரி 3ஆம் தேதி முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானிக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் நரசிம்ம ராவ் ஆகிய மூவருக்கும் இன்று ஒரே நாளில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com