பீகார் தேர்தல் முடிவுகள்… என்டிஏ கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை!

பீகார் தேர்தல் முடிவுகள்… என்டிஏ கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை!
Published on

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 180 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 79 தொகுதிகளிலும், ஜேடியு 79 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. 18 தொகுதிகளிலும் ஹெச்.ஏ. எம். 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தியா கூட்டணி மொத்தம் 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் ஆர்ஜேடி 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 07 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

தேர்தல் வியூகவாதியும், அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மூன்று இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com