பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி!

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்
Published on

பீகார் தேர்தல் - இரவு 10:30 மணி நிலவரம்: என்.டி.ஏ. - 202, மகாகத்பந்தன் கூட்டணி - 34, ஜன் சுராஜ் - 00, மற்றவை - 07

பீகார் சட்டமன்ற தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி!

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதில் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை 14,532 வாக்குகள் வித்தியாத்தில் வீழ்த்தினார். 

"நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. 2025 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் இணையற்ற வெற்றியை அளித்ததற்காக பீகாரின் ஒவ்வொருவருக்கும் நன்றி.” - பிரதமர் மோடி

பீகார் தேர்தல் - மாலை 5:30 மணி நிலவரம்: என்.டி.ஏ. - 203, மகாகத்பந்தன் கூட்டணி - 33, ஜன் சுராஜ் - 00, மற்றவை - 07

Nitin Gadkari, minister road transport
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“பீகார் மக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு ஆதரவு அளித்தது வரலாற்று சிறப்புமிக்கதாகும். இரட்டை இன்ஜின் அரசாங்கத்தால் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு பீகார் மக்கள் தங்களின் ஆதரை தந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதனால், மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்துள்ளனர். இதற்காக பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பீகார் தேர்தல் - பகல் 1 மணி நிலவரம்: என்.டி.ஏ -196, மகாகத்பந்தன் கூட்டணி - 41, ஜான் சுராஜ் - 00, மற்றவை - 06

மைதிலி தாக்கூர் முன்னிலை!                                           கடந்த மாதம் பாஜகவில் இணைந்த 25 வயதான இளம் பாடகி மைதிலி தாக்கூர் அலிநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். 6 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 22,236 வாக்குகள் பெற்றுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கும் நிலையில், இனிப்பு வழங்கி கொண்டாடும் ஐக்கிய ஜனதாதளம் தொண்டர்கள்!

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை!

எங்கே பிரசாந்த் கிஷோர் கட்சி...?                                  பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிஎந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 10,957 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 12,230 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

தேஜகூ: 186 இடங்களில் முன்னிலை; 200 இடங்களை எட்டுமா?

ஆர்ஜேடி-காங்கிரஸ் மகா கூட்டணி: முன்னிலை நிலவரம்-ஆர்ஜேடி: 46 காங்:07 கம்யூனிஸ்ட்: 07

தேசிய ஜனநாயகக்கூட்டணி: பாஜக: 79 ஐக்கிய ஜனதாதளம்: 79 லோக்ஜன்சக்தி: 18 ஹெச்ஏ எம்:3

logo
Andhimazhai
www.andhimazhai.com