மாதிரிப்படம்
மாதிரிப்படம்

திருமணத்தை தள்ளிப்போட்ட காதலன்… காதலி கொடுத்த தண்டனையை பாருங்க !

திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த காதலனின் ஆணுறுப்பை அறுத்து கழிவறையில் வீசிய கொடூர காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மதுராவில் சிறிய நர்சிங் ஹோம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இருவருக்கும் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், இதனால் அந்த பெண் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு ஏழெட்டு முறை தேதி குறிக்கப்பட்டாலும், திருமணத்தை ஏனோ தள்ளிப்போட்டு வந்துள்ளார் காதலன். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், காதலனின் ஆணுறுப்பை அறுத்து, கழிவறையில் வீசியிருக்கிறார்.

இது குறித்த தகவலறிந்த சரண் மாவட்ட காவல் துறையினர், அந்த பெண்ணை கைது செய்ததோடு, அவரின் காதலரை மீட்டு பாட்னா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தன் காதலன் மீது இப்படியொரு வன்முறையில் ஈடுபட்டதற்காக எவ்வித வருத்தமும் படவில்லை என்று அந்த பெண் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் காவல் துறையினர், அந்த பெண் நடத்தி வரும் நர்சிங் ஹோம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com