இந்தியா
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.இராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை இதை அறிவித்தார்.
தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்துவரும் சி.பி. இராதாகிருஷ்ணன் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.
ஆரம்பம் முதலே இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.