பாஜக தேர்தல் குழு கூட்டம்
பாஜக தேர்தல் குழு கூட்டம்

முந்திக்கொண்ட பா.ஜ.க.- சத்திஸ்கர், ம.பி. சட்டப்பேரவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சத்திஸ்கர், மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், எல்லா கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க. தன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான முன் தயாரிப்புகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. பாஜகவின் தேர்தல் குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் நட்டா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

அதில், சத்திஸ்கர், மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் முடிவுசெய்யப்பட்டது.

சத்திஸ்கர் மாநிலத்துக்கு 21 வேட்பாளர்களும், மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு 39 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சத்திஸ்கரில் மக்களவை உறுப்பினர் விஜய் பாகலை பா.ஜ.க. இந்த முறை சட்டமன்றத்துக்கு நிறுத்துகிறது. பதான் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com